News April 20, 2025
கல்கத்தாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்றவர் கைது

கல்கத்தாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருசடி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆரல்வாய்மொழி குருசடி பகுதி சேர்ந்த ஜான் பெஞ்சமின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 230 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 28, 2025
குமரி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கரும்பாட்டூரை சேர்ந்தவர் கண்ணன் (42) தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மது குடித்துவிட்டு வீட்டின் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார். கண்ணன் மது குடிப்பதை அவரது மனைவி கண்டித்து உள்ளார். இதனால் கண்ணன் விஷம் குடித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டார். தென் தாமரைகுளம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
News November 28, 2025
குமரி: உங்கள் வழக்குகளை முடிக்க சூப்பர் வாய்ப்பு!

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் டிசம்பர் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை மற்றும் பூதப்பாண்டி நீதிமன்ற வளாகத்திலும் மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற உள்ளது.
News November 28, 2025
நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலர் நியமனம்

நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலர் ஆல்பர் மதியரசு விடுப்பில் சென்றதைத் தொடர்ந்து அரவிந்த் ஜோதி நாகர்கோவில் நகர் நலஅலுவலர் பொறுப்பில் இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலராக தேனி சுகாதாரப் பிரிவை சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொறுப்பினை ஒப்படைக்க அரவிந்த் ஜோதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


