News December 5, 2024
கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி!

வேலூர்,திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான intercollegiate டேபிள் டென்னிஸ் போட்டி 08.12.24 மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் மட்டும் இப்போட்டியில் பங்கு பெறலாம். இந்த போட்டி பல்கலைக்கழகத்தின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
Similar News
News November 16, 2025
வேலூரில் துணிகரம் – 45 பவுன் நகை வீடு புகுந்து கொள்ளை!

வேலூர்: காட்பாடி திருநகர் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 45 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்றனர். இதை அறிந்த ராஜ்குமார் அதிர்ச்சியடைந்து நேற்று (நவ.15) விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
News November 16, 2025
வேலூர்: சந்தன மர கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு!

வேலூர்: முத்துகுமரன் மலை அருகே, அடர்ந்த வனப்பகுதியில் உயர் ரக சந்தன மரங்கள் உள்ளன. இதனை, வனத்துறையினர் இரவும், பகலுமாக பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் மர்ம நபர்கள் சிலர் சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வரும் நிலையில், சந்தன மர கடத்தல் கும்பலை பிடிக்க நேற்று (நவ.16) முதல் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News November 16, 2025
வேலூர்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!

வேலூர்: அணைக்கட்டு அடுத்த பீஞ்சைமந்தை, அல்லேரி, ஜார்தான் கொள்ளை, பட்டி குடிசை ஆகிய மலைப்பகுதிகளில் திருட்டு வாகனங்களை அதிகம் பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று (நவ. 15) அணைக்கட்டு டிஎஸ்பி நந்தகுமார் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனைகள் முறையான ஆவணங்கள் இல்லாத 24 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


