News August 14, 2024
கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம்

தேசிய குடற்புழுநீக்க தினத்தை முன்னிட்டு, (ஆக-23 மற்றும் ஆக-30)ஆகிய தேதிகளில்,1 முதல் 19 வயதிற்க்குட்பட்ட குழந்தைகள்,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்காணும் தேதிகளில் முகாம்கள் நடத்துவது தொடர்பாக ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.
Similar News
News November 27, 2025
பெரம்பலூர்: புதிய பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஊராட்சியில், ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 15000 லிட்டர் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் மையத்தினை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள், திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News November 27, 2025
பெரம்பலூர்: மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டம், நான்கு ரோடு அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு
மின்சாார சட்ட மசோதாவை திரும்பப்பெறுக, உள்ளிட்ட நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெறுக, உத்திரப்பிரதேச மின்வாரியத்தை தனியார்மயம் செய்யாதே என பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கத்தினர் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News November 27, 2025
பெரம்பலூர்: SIR பணிகள் தீவிரம்!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லெப்பைகுடிக்காடு அருகே உள்ள பென்னகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கலான,மிளகாநத்தம் மற்றும் கீழகுடிக்காடு ஆகிய கிராமத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, SIR படிவம் திருத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பொதுமக்கள் பலர் SIR படிவத்தை பதிவு செய்து வருகின்றனர்.


