News April 12, 2024
கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர்: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழியினை கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ந.சிவா உட்பட பலர் உடனிருந்தனர்.
Similar News
News December 9, 2025
பெரம்பலுர்: பள்ளி மாணவனுக்கு குவியும் பாராட்டு

வேலூர் VIT பல்கலைக் கழகம் நடத்திய மாநில அளவிலான திருக்குறள் போட்டியில், வெற்றி பெற்ற Top 10 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவில், வாலிகண்டபுரம் அ. மே நி.பள்ளி மாணவன் யுவன் ஸ்ரீக்கு, VIT வேந்தர் விசுவநாதன் சான்றிதழ் மற்றும் ரூ.7000 ரொக்கப் பரிசும் பெறுகிறார். அம்மாணவனை நேற்று (08.12.2025) பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராசு மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.
News December 9, 2025
பெரம்பலூர்: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள், பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். வருகிற டிச.31ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-296565 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


