News January 2, 2025

கலெக்டர் சுப்புலட்சுமி  தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்கவுள்ளது. எனவே www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 2) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 5, 2025

வேலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ!

image

வேலூரை அடுத்த அரியூர் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் 17 வயது சிறுமியை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் 17 வயது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அரசு மருத்துவர்கள் அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது நேற்று (டிச.4) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 5, 2025

வேலூர்: அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மர்ம நபர்!

image

வேலூர்: குடியாத்தம் அருகே, பாண்டிச்சேரியில் இருந்து வந்த அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற முரளி (50) என்பவர், காட்பாடி நான்கு முனை கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரால் தாக்கப்பட்டார். காயமடைந்த ஓட்டுநர் முரளி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து உதயகுமார் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 5, 2025

வேலூர் மாவட்ட இரவு ரோந்துப் பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.4) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!