News December 31, 2024

கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 வாயில்கள் மூடல்

image

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு இரவில் மின் விளக்குகள் எரியாததால், சமூக விரோதிகள் பலர் மது அருந்த பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து, கலெக்டர் வளாகத்திற்குள் இரவில் வெளிநபர்கள் நுழைவதைதடுக்க, இரவு 10 மணிக்கு மேல் பூட்டி வைக்க கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். எனவே வளாகத்தில் 3 வாயில்களும் மூடப்பட்டன.

Similar News

News November 22, 2025

காஞ்சி: இலவச பட்டா வேண்டுமா? இதை பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இதனை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 22, 2025

காஞ்சி: உங்களிடம் G-pay, Paytm, Phonepe இருக்கா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News November 22, 2025

த.வெ.க. பொதுச்செயலாளர் முக்கிய அறிவிப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்னம் ஊராட்சியில் அமைந்துள்ள ஜேப்பியர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், நாளை (நவ.23) காலை 11 மணிக்கு தமிழக வெற்றி கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என த.வெ.க. பொதுச்செயலாளர் புதுவை என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!