News April 7, 2025
கலெக்டர் அலுவலகத்தில் 673 மனுக்கள் குவிந்தது

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 673 மனுக்களை அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதனை பரிந்துரை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 13, 2025
திருப்பூரில் மின்தடை அறிவிப்பு!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.15) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ், ரெட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி,ஆர் பாளையம், சிறுகளஞ்சி, வரப்பாளையம், வரப்பாளையம், பாப்பம்பாளையம், செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிகவுண்டம்பாளையம், வட்டலாபதி, செரங்காடு, முத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 13, 2025
திருப்பூர் அருகே மதுவால் நேர்ந்த வினை: பறிபோன உயிர்!

திருப்பூர் அவிநாசி, மங்கலம் ரோடு ராயன் கோவில் காலனியில் வசிப்பவர் ராமசாமி. இவர், தனது நண்பர் ஜெகதீஷுடன், நேற்று முந்தினம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஜெகதீஷன் தள்ளிவிட்டதில் ராமசாமி கீழே விழுந்து, சுயநினைவை இழந்தார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், ராமசாமியை பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. இதனை அடுத்து ஜெகதீஷை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 13, 2025
திருப்பூரில் பாலியல் தொல்லை! அதிரடி தீர்ப்பு

திருப்பூர், ராக்கியாபாளையம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி கேட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரேம்குமார் என்ற முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதில் பிரேம்குமாருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்துள்ளது.


