News April 16, 2025
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலநிலை மாற்றத்திற்கான விவசாய உத்திகள் குறித்த விவசாயிகளுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விவசாய உத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
Similar News
News September 18, 2025
சீர்காழி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலெக்டர் ஆய்வு

சீர்காழி வட்டம் நிம்மேலி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்று வருகிறது முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்மேலும் பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். ஆய்வின்போது கோட்டாட்சியர் சுரேஷ் வட்டாட்சியர் அருள்ஜோதி ஆகியோர் உடன் இருந்தனர்.
News September 18, 2025
மயிலாடுதுறை: குறைகளை கேட்டறியும் குறைதீர் வாகனம்

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அருகே பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் கிராமத்தில் இன்று பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் அவர்களின் “நம்ம ஊரு நம்ம எம் எல் ஏ” குறைதீர் வாகனமானது நேரில் சென்று அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து அதனை மனுவாக பெற்றனர். மேலும் உடனடி தீர்வுகளுக்கு தொலைபேசி எண்ணையும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
News September 18, 2025
மயிலாடுதுறை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க

ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும். இதில் நீங்கள் மாற்றம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க. தகவல்களுக்கு: 9677736557, 1800-599-5950 அழையுங்க. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.