News October 23, 2024
கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வரும் நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் வெள்ளிமலை முதல் சின்னத்திருப்பதி வரை பேருந்து வசதி தொடங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
Similar News
News December 3, 2025
BREAKING: கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை

‘டிட்வா’ புயல் எதிரொலியாக இன்று (டிச.3) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. உங்க எரியா மழை நிலவரம் குறித்து கமெண்ட் பண்ணுங்க!
News December 3, 2025
கள்ளக்குறிச்சி: தங்கை குழந்தையை பார்க்க வந்தவர் தற்கொலை!

கள்ளக்குறிச்சி: வடகுறும்பூரைச் சேர்ந்த கண்மணி ராஜா சென்னையில் உள்ள தனியார் பைக் ஷோரூம் இல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது தங்கைக்குப் பிறந்த குழந்தையை பார்க்க நேற்று (டிச.2) சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவர், தனக்கு திருமணமாக காலதாமதம் ஆகிறது என மனவேதனையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
News December 2, 2025
தியாகதுருகம் : தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் இன்று டிச( 2 ) தீயணைப்பு நிலையம் அருகில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை திரளான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். தமிழக அரசின் நான்கரை ஆண்டு கால சாதனைகளை விளக்கி இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் இதில் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது.


