News March 29, 2024
கலவை அருகே எஸ்பி ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளான குப்பிடிசாத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சொறையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வாழைப்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாலி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய மையங்களில் மாவட்ட எஸ்பி கிரண் சுருதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News August 11, 2025
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் இன்று சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியில் போதைப்பொருள் எதிர்ப்பு சிப்பாயாக இருங்கள், ஒன்றாக நாம் ஒரு போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும் எனவும், வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள் மருந்துகளை அல்ல எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்குங்கள்!
News August 11, 2025
ராணிப்பேட்டை BHEL-இல் சூப்பர் வேலை!

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாட்டில் செயல்படும் ஆலை உட்பட மத்திய அரசின் 11 BHEL ஆலைகளில் ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலெக்ட்ரிசியன் உட்பட பல பதவிகளுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. தகுதி: ITI, சம்பளம்: ரூ.29,500-ரூ.65,000. வயது: OBC-30, SC/ST-32, EWS-27. தேவைப்படுவோர் <
News August 11, 2025
ராணிப்பேட்டை: ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை!

அரக்கோணம் அருகே உள்ள அம்மனூர் பகுதியை சேர்ந்த திமுக கட்சி நிர்வாகி சுதாகர் (45). இவரிடம் பணிபுரிந்தவர் அபினேஷ் (31). இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அபினேஷ் சுதாகரை கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்காக அபினேஷ் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். ரத்தனகிரி காவல் நிலையத்திற்கு நேற்று (ஆகஸ்ட் 10) கையெழுத்திட சென்ற போது அபினேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டார்.