News May 16, 2024
கலசப்பாக்கம்: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண். வழக்கறிஞரான இவர், தனது நிலம் சம்பந்தமாக கலசப்பாக்கம் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கிய நிலையில், எதிர் தரப்பினரான வெங்கடேசன் என்பவர் நேற்று இரவு வீடு புகுந்து வழக்கறிஞர் அருணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார். அருண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (28.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
தி.மலை: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

தி.மலை மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 28, 2025
தி.மலை: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் இங்கே<


