News March 29, 2024
கலக்கும் பெரம்பலூர் வீரர்கள்

பெரம்பலூர்: மேலப்புலியூர் கலைசெல்வன்,
ஆதனூர் ஜுவா , மங்கலமேடு அம்பிகா, புது அம்மாபாளையம் ரம்யா ஆகிய மாற்றுத்திறனாளி வீரர்கள் 2024 மார்ச்-30 அன்று நடைபெற உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் செல்லவுள்ளனர். இதில் வீரர்கள் மேலப்புலியூர் கலைச்செல்வன் மற்றும் ஆதனூர் ஜீவா பெரம்பலூர் முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் உட்பட பலரிடம் வாழ்த்துகள் பெற்றனர்.
Similar News
News November 24, 2025
பெரம்பலூர்: திமுக சார்பில் ஆய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், இன்று திமுக சார்பில் ஆய்வு கூட்டம் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகிய பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
News November 24, 2025
பெரம்பலூர்: தேர்வு கிடையாது… ரயில்வே வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29,OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News November 24, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்

பெரம்பலூர், அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு, இன்று இலவச மிதிவண்டியை போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் மற்றும் கழக பொறுப்பாளர் வி. ஜெகதீசன் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.


