News March 27, 2025

கறிக்கோழி, முட்டை கோழி விலை உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று, நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர் . எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.77 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல் ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி, கிலோவுக்கு ரூ.5 உயர்த்தப்பட்டு, ரூ.101-க்கு விற்பனையாகி வருகின்றது.

Similar News

News January 5, 2026

நாமக்கல்: பொங்கல் பரிசு குறித்த புகாரா? CLICK

image

நாமக்கல் மக்களே தமிழக அரசு சார்பில் ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது, இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.3000 ஆகியவை அடங்கும். இந்த தொகுப்பை பெறுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இங்கு<> க்ளிக் <<>>செய்து மாவட்ட குறைதீர் அலுவலர்கள் விவரங்களை அறிந்து தீர்வு காணலாம்! யாருக்காவது பயன்படும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

நாமக்கல்லில் டன் கணக்கில் கடத்தல்: போலீஸ் அதிரடி

image

நாமக்கல் மாவட்டத்தில் 2025ல் ரேஷன் அரிசி கடத்தியது பதுக்கி விற்பனை செய்தது என 364 வழக்கு பதிந்து சம்பந்தப் வழக்குகளில் 364 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 140 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 122 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும், அபராதம் மூலம் ரூ.18 லட்சத்து 72100 வசூல் செய்யப்பட்டுள்ளது என குடிமை பொருள் குற்றப்புலனாய்புத்துறை தெரிவித்துள்ளது.

News January 5, 2026

பரமத்திவேலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருவண்ணாமலையை சேர்ந்தவர் கன்னியப்பன் (24). இவர் ஜமன்இளம்பள்ளியில் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் இரவு சாலையோரம் நடந்து சென்ற போது சோழசிராமணி நோக்கி சென்ற வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு திருச்செங்கோடு GHக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!