News August 3, 2024
கர்ப்பிணி சிறுமி தற்கொலை; கணவர் மீது ‘போக்சோ’

ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையாரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (24). கரும்பு கூலித் தொழிலாளியான இவர், 16 வயது சிறுமியை காதலித்து கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார், விசாரணை நடத்தி அவரை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.
Similar News
News November 30, 2025
SIR படிவங்கள் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த நான்காம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி, வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் இன்று (நவ.30) அறிவித்துள்ளார்.
News November 30, 2025
கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய 6 சிவன் கோயில்கள்

1). அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில், 2) செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில், 3) பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில், 4) மகரூர் கைலாசநாதர் கோயில், 5) தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில், 6) ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில். இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 30, 2025
கள்ளக்குறிச்சி: பட்டாவில் மாற்றமா? சூப்பர் வசதி

கள்ளக்குறிச்சியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. <


