News October 24, 2024
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கே ஆர் பி அணையில் நீர்வரத்து 3438 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து 3313 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
கிருஷ்ணகிரி: பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை! APPLY

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 514 கிரெடிட் ஆஃபீசர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க அடுத்தாண்டு ஜன.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News December 19, 2025
கிருஷ்ணகிரியில் தலை துண்டாகி கொடூர பலி!

தேன்கனிக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை அருகே வளைவில் செல்லும்போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர விளம்பரப் பலகையில் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில்சிஸ்பால் சிங்கின் தலை துண்டானது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 19, 2025
கிருஷ்ணகிரியில் வெடிகுண்டு வீச்சு!

கிருஷ்ணகிரி அருகே பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த வழக்கில் சக்திவேல், தனுஷ், சேகர் ஆகிய மூவரை கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு நாட்டு வெடிகுண்டுகளை வழங்கிய தர்ஜூன் நிஷா மற்றும் 125 கிலோ வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருந்த பர்கத்துல்லா ஆகியோரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


