News May 10, 2024

கரூர் 16ஆம் இடம் !

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90.58% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.26 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.69 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று கரூர் மாவட்டம் 16ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News May 7, 2025

கரூர்: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்

image

▶️கரூர் டவுன் – 04324-217100. ▶️வாங்கல் – 04324-228224. ▶️தான்தோணி மலை – 9498203170. ▶️அரவக்குறிச்சி – 04320-230026 ▶️கே.பரமத்தி – 04324-283321. ▶️தென்னிலை – 04320237227. ▶️குளித்தலை – 04323-222094. ▶️நங்கவரம் – 9498167844. ▶️சின்னதாராபுரம் – 04324-232229 ▶️மாயனூர் – 04323-243326. ▶️லாலாபேட்டை -04323-242224. ▶️தோகமலை – 04323-252224. இதை Share பண்ணுங்க.

News May 7, 2025

கரூரில் சூப்பர்வைசர், ஃபேப்ரிக் செக்கர் வேலை!

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் ஜவுளி & கைத்தறி நிறுவனத்தில் சூப்பர்வைசர், ஃபேப்ரிக் செக்கர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். 10ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News May 7, 2025

இடப்பிரச்சனையில் தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு

image

குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த மோகன் (54) மற்றும் விபின் குமார் (35) ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வரும் இடப்பிரச்சினை தொடர்பாக குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!