News April 2, 2025
கரூர்: வெயிலில் வேலை செய்வோர் கவனத்திற்கு!

கரூரில் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக பொது சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில், வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டுமெனில் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வெடுத்து கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT!
Similar News
News November 17, 2025
கரூர் அருகே வசமாக சிக்கிய பெண்!

கரூர் பசுபதிபாளையம் கொடியரசு கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தானசாமி மனைவி வளர்மதி (62). இவர் அப்பகுதியில் உள்ள வடக்கு தெருவில் முள்ளு காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பசுபதிபாளையம் போலீசார் மது விற்ற வளர்மதி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்
News November 17, 2025
கரூரில் சட்டவிரோத மது விற்பனை; ஒருவர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் அடுத்த பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் விஜயகுமார் (65). இவர் தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற விஜயகுமார் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
News November 16, 2025
கரூர்: லாட்டரி டிக்கெட் விற்றவர் மீது வழக்கு பதிவு

கரூர் மாவட்டம், பாலவிடுதி பகுதியில் சண்முகவேல் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தார். பாலவிடுதி போலீசார் தகவல் அறிந்து, சண்முகவேல் என்பவரிடமிருந்து வெள்ளை தாளில் எழுதப்பட்ட ஆன்லைன் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சண்முகவேல் மீது பாலவிடுதி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.


