News March 19, 2024
கரூர்: விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு தென்கரை பாசன வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 19, 2025
BREAKING: கரூரில் 79,690 பெயர்கள் நீக்கம்

கரூர் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.19) வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
1) எஸ்ஐஆரு-க்கு முன்- 8,98,362
2) எஸ்ஐஆரு-க்கு பின்- 8,18,672
இதில் இறந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், இரட்டை பதிவுகள், குடிபெயர்ந்தோர் என, (மொத்தம்- 79,690) பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
News December 19, 2025
கரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!
News December 19, 2025
கரூரில் டிராக்டர் பின்னால் ஸ்கூட்டி மோதி விபத்து!

கரூர் காளியப்பனூரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (70). இவர் தனது ஸ்கூட்டியில் தாந்தோணிமலை சாலையில் சென்றபோது, முன்னாள் பிரவீன் குமார் ஓட்டிச் சென்ற டிராக்டர் திடீரென எவ்வித சிக்னல் இன்றி திரும்பிய போது, பின்னால் ஸ்கூட்டி மோதி ராஜமாணிக்கம் கீழே விழுந்து தலை, வலது காலில் காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். தாந்தோணிமலை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.


