News April 23, 2025

கரூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டு அவர்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 4, 2025

கிருஷ்ணராயபுரத்தில் வசமாக சிக்கிய நபர்!

image

கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் பிரபாகரன் (31). இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீஸார் மது விற்ற பிரபாகரன் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.

News December 4, 2025

குளித்தலையில் அருகே 6 பேருக்கு காப்பு!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சரக்கம்பட்டி கருப்புசாமி கோவில் பகுதியில், சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று முன் தினம் இரவு 9:00 மணிய ளவில் ரோந்து சென்றனர்.அப்போது பணம் வைத்து சூதாடிய சரக்கம்பட்டியை சேர்ந்த இளங்கோவன் (30), தங்கமுத்து (26), பழனிச்சாமி (41), ஆண்டியப்பன் (26), சுப்பிரமணி (45), மணி (55), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News December 3, 2025

கரூர்: காவல்துறை சார்பில் உதவி எண் வெளியீடு

image

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் முதியோர் நலனுக்காக உதவி எண்” (14567)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் முதியோர் மற்றும் அவர்களின் நலவாழ்வுக்கான தகவல், வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் தலையீட்டு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும். மூதியோரின் பாதுகாப்பும் நலனும் கருதி, எந்த நேரத்திலும் இந்த எண்ணை அழைத்து உதவியை பெறலாம்.

error: Content is protected !!