News April 20, 2024

கரூர்: வாக்குப்பதிவு இயந்திர அறைக்கு சீல்

image

கரூர் மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல், தேர்தல் பொது பார்வையாளர் அசோக் ரெக்காவர் முன்னிலையில் தளவாய் பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரி வாக்கு என்னும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீலிடப்பட்டது. மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News

News April 26, 2025

வீட்டிலிருந்த மகள் மாயம் தாயார் புகார்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகள் வடிவுக்கரசி 17. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்த வடிவுகரசி காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரின் தாயார் வசந்தா அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் இன்று வழக்குப் பதிந்து விசாரணை.

News April 26, 2025

விஷக் கதண்டு கடித்ததால் விவசாயி உயிரிழப்பு!

image

சின்னதாராபுரம் அருகே வெள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் . இவர் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது விஷக் கதண்டு கடித்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சின்னதாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 25, 2025

கரூரில் ’மயோனைஸ்’ ஆய்வு தீவிரம்!

image

பதப்படுத்தப்படாத முட்டையிலிருந்து (பச்சை முட்டை) மயோனைஸ் தயாரிக்கப்பட்டு உண்பதால், இரைப்பை மற்றும் குடல் தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது‌. இதன்காரணமாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு 08-04-2025 முதல் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் நாட்களில் கரூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு பணியில் ஈடுபட கரூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர். 

error: Content is protected !!