News March 19, 2024
கரூர்: ரூ.3,38,388 பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதூர், சின்னரெட்டியப்பட்டி , ஆர்.டி.மலை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு வாகனங்கள் மற்றும் பால் வேனில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.3,38,388 ரொக்க பணத்தை பறக்கும் படை அலுவலர் லலிதா தலைமையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 23, 2025
தொழில் முனைவோருக்கு மானியத்தில் கடன் பெற அழைப்பு

கரூர், மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில், மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். தகுதியும், ஆர்வமும் கொண்டவர்கள் போட்டோ, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, வங்கி கணக்கு விபரங்களுடன், www.msmeonline.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
News November 23, 2025
கரூரில் தட்டி தூக்கிய மதுவிலக்கு போலீசார்!

கரூர் மாவட்ட மதுவிலக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார் நங்கவரம், லாலாபேட்டை காவல் நிலைய பகுதிகளில் மதுவிற்பனை குறித்து சோதனை செய்தனர். இதில் சட்ட விரோதமாக மது விற்ற புண்ணியமூர்த்தி (36), அன்னக்கிளி (60), நதியா 38 ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 87 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
News November 23, 2025
கரூர்: PHONE தொலைந்து விட்டதா.. SUPER தகவல்

கரூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <


