News January 24, 2025
கரூர் மாவட்ட செயலாளரை அறிவித்த விஜய்

தவெக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு கரூர்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கரூர் மேற்கு மாவட்ட கழகத்திற்கு வி.பி.மதியழகன் மாவட்ட கழக செயலாளராக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இணை செயலாளராக விக்னேஸ்வரன், பொருளாளராக ஆறுமுகம், துணை செயலாளராக சசிகாந்தன்,ஜெயலட்சுமி மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்களையும் நியமித்து அவரது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
கரூர் மக்களுக்கு ஜாக்பாட்! – மிஸ் பண்ணிடாதீங்க

கரூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குத்தொகைகள் ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு ஒப்படைக்கும் முகாம் வருகின்ற 5 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் துவக்கி வைக்க உள்ளார். இதில் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் வருகை புரிந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

கரூர்: தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்!

கரூரில், தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் (NAPS) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, கரூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வெண்ணைய்மலை, கரூர் வளாகத்தில் 08.12.2025 அன்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.