News April 24, 2025
கரூர் மாவட்ட இளைஞர்களுக்கு விருது !

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2025ஆம் ஆண்டிற்கான விருது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதனால் இந்த விருதிற்கு 15 முதல் 35 வயது வரை உள்ள கரூர் மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
கரூரில் நாளை.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம், வெண்ணைமலை வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள 2026-ம் ஆண்டிற்கான TNPSC-Gr-I &GR-2, ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு (நவ.28) அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு 94990-55912 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்தார்.
News November 27, 2025
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்: தீவிர விசாரணை

கடந்த செப்., 27ல், கரூரில் தவெக., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து, சிபிஐ., அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கரூர் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கோவையை சேர்ந்த ராகுல்காந்தி, கோகுலக்கண்ணன், கரூர் மாவட்ட தேமுதிக நிர்வாகி நவலடி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
News November 26, 2025
கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் (28.11.2025) தேதி அன்று மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.


