News October 23, 2024
கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் (28.10.2024) அன்று பிற்பகல் 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 22, 2025
கரூர்: அரசு வங்கியில் சூப்பர் வேலை! APPLY NOW

கரூர் பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா…? உங்கள் வங்கிப் பணிக் கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. அரசு வங்கியின் UCO வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி நாள். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News October 22, 2025
JUST IN: கரூர் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(அக்.22) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 22, 2025
கரூர்: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி!

கரூர்: தான்தோன்றிமலையை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் கவுசிக்குமார்(17). இவர், பசுபதிபாளையத்தில் உள்ள, தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று(அக்.21) தான்தோன்றிமலையில் உள்ள, இறைச்சி கடையில் தற்காலிக வேலைக்கு சென்று கோழியை சுத்தம் செய்ய, மெஷினை இயக்க சுவிட்ச் போட்டபோது, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.