News August 7, 2024

கரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

கரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 15, 2025

BREAKING: கரூர் சம்பவம்: பேரவையில் CM விளக்கம்!

image

கரூர் துயர சம்பவம் குறித்து இன்று (அக்.15) சட்டமன்றப் பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “த.வெ.க. பிரசாரத்திற்கு வழக்கத்தை விட அதிக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஏற்பாட்டாளர்கள் போதிய குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. 41 உயிர்களைப் பலி கொண்ட இத்துயர சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

News October 15, 2025

கரூர்: டூவீலர் மெக்கானிக் நெஞ்சு வலி காரணமாக பலி

image

கரூர் அருகே வாழ்வார்மங்கலம் பகுதியில் ராஜலிங்கம் (35) என்பவர் தனது டூ வீலர் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, திடீரென நெஞ்சுவலியின் காரணமாக மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News October 15, 2025

கரூர் மாவட்டத்தில் 17 வட்டாட்சியர்கள் இடமாற்றம்!

image

கரூர் மாவட்ட வருவாய் அளவில் வட்டாட்சியர் நிலையில் நிர்வாக நலன் கருதி மண்மங்கலம், கரூர், குளித்தலை, புகலூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்த 17 வட்டாட்சியர்கள் பணியிடங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!