News November 23, 2024

கரூர் மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம்

image

கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்!

Similar News

News February 10, 2026

கரூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

News February 10, 2026

கரூர்: பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

image

பிப்ரவரி 10 இன்று கரூர் தபால் தலைமை நிலையம் அருகில் திமுக ஆட்சியில் தினம் தினம் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பாக மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பி வி செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி தலைவி பிரியா ஈஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News February 10, 2026

கரூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

கரூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!