News March 25, 2025
கரூர் மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

கரூர்: AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News November 22, 2025
கரூர்: வாக்களர் கவனத்திற்கு IMPORTANT

கரூர் மாவட்டம், 2002 வாக்காளர் பட்டியல் இல் உங்கள் வாக்காளர் விபரங்களை தேடும் வகைக்யில் கரூர் மாவட்ட நிர்வாக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. https://karur-electors.vercel.app/?tsc=AC152 இந்த இணையதளம் மூலமாக தங்களது 2002 வாக்காளர் விவரங்களை ஐந்து வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும். இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
News November 22, 2025
கரூரில் இந்த பகுதியெல்லாம் கரண்ட் இருக்காது!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பசுபதிபாளையம், பாலம்பாள்புரம், ஒத்தக்கடை, வெள்ளியணை ஆகிய துணை மின் நிலையத்தில் வருகிற 25-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் பசுபதிபாளையம், வடக்கு பசுபதிபாளையம், ராமாகவுண்டனூர், கொளந்தா கொளந்தாகவுண்டனூர். ஆதிமாரியம்மன் கோவில் தெரு, சுங்ககேட், எஸ்.பி. காலனி, வாங்கப்பாளையம், வெள்ளியணை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
News November 22, 2025
முதல் நிலைக் காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்: எஸ்பி உத்தரவு

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த பிரபாகரன் 35 என்பவர் காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டதாகவும், மேலும் அவரது நண்பருடன் அப்பகுதியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட எஸ்பி உத்தரவின்படி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


