News April 6, 2025
கரூர் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56809 திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயில், ஏப்ரல் 08 & 11, 2025 அன்று கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய பயண நிறுத்தம் செய்யப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது. என ரயில்வே அதிகாரி அறிவித்துள்ளார்.
Similar News
News April 17, 2025
கரூரில் இலவச எம்ப்ராய்டரி பயிற்சி !

கரூர்:தாட்கோ மூலம், டிப்ளமோ ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வழங்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக, பல்வேறு பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, குடும்ப வருமானம் 3 லட்சம் உள்ள 18 – 30 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.SHARE பண்ணுங்க!
News April 17, 2025
போக்சோ கைதிக்கு நீதிமன்றம் தண்டனை !

கரூர் வேலாயுதம்பாளையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அப்துல் சமத் (59) என்பவர் மீது கரூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இன்று(ஏப்.16) கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
News April 16, 2025
சிறுமி பாலியல் வழக்கில் 6 நபர்களுக்கு அதிரடி தீர்ப்பு

கரூர், ராயனூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த வழக்கில் கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நிஷாந்த், அரவிந்த் ஆகியோர்களுக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், வசந்தகுமார், கலைவாணன், கோகுல்நாத், பார்த்திபன் ஆகியோர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதத்துடன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.