News March 26, 2025

கரூர்: நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி முதியவர் உயிரிழப்பு

image

கரூர் அரசு காலனியைச் சேர்ந்த சீனிவாசன் (75). இவர் காந்திகிராமத்தில் நடந்து சென்றுபோது, தாந்தோணிமலையைச் சேர்ந்த வினோத் குமார் மனைவி கிரிஜா (37) ஓட்டி வந்த டூ வீலர் சீனிவாசன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தான்தோன்றி மலை போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை. 

Similar News

News December 1, 2025

கரூர்: உழவர் சந்தை காய்கறி விலை பட்டியல்!

image

கரூர் உழவர் சந்தையில் இன்று (01.12 .2025) திங்கட்கிழமை காய்கறி மற்றும் பழங்களுக்கான தினசரி விலை பட்டியல் வெளியிடப்பட்டது. தக்காளி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் முதல் வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்கள் வரை தரம் 1 மற்றும் தரம் 2 விலையில் பட்டியல் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 1, 2025

மல்லயுத்தப் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற மாணவர்!

image

கரூர், ராமகிருஷ்ணாபுரம் C.S.I. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் பத்ரிநாத். மல்யுத்தம் போட்டியின் 55 கிலோ பிரிவில் சிறந்த திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் அவருக்கு நினைவுப் பரிசும் பதக்கமும் வழங்கி பாராட்டினர்.

News December 1, 2025

கரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு கரூர் மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!