News March 21, 2024
கரூர்: தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை

கரூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நாடாளுமன்ற தேர்தல் செலவின பார்வையாளர் போசு பாபு அலி தலைமையில் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் தொடர்பான செலவினங்களை எவ்வாறு கணக்கிடுவது, அதனைத் தொடர்ந்து, எப்படி கண்காணிப்பது அது தொடர்பான விபரங்களை எவ்வாறு சேகரிக்க, சேகரிக்கப்பட்ட விபரங்களையும், ஆவணங்களையும் எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளை தெரிவித்தார்.
Similar News
News October 22, 2025
JUST IN: கரூர் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(அக்.22) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 22, 2025
கரூர்: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி!

கரூர்: தான்தோன்றிமலையை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் கவுசிக்குமார்(17). இவர், பசுபதிபாளையத்தில் உள்ள, தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று(அக்.21) தான்தோன்றிமலையில் உள்ள, இறைச்சி கடையில் தற்காலிக வேலைக்கு சென்று கோழியை சுத்தம் செய்ய, மெஷினை இயக்க சுவிட்ச் போட்டபோது, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News October 22, 2025
கரூர்: சாலை விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி!

கரூர்: புலியூர் உப்பிடமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(48). இவர் அரசு பேருந்து நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று(அக்.21) தனது பைக்கில் தாந்தோணிமலை மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதி பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.