News April 5, 2025
கரூர்: திருமண மண்டபம் ஏலத்தில் விற்பனை!

கரூர்: கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் மாஸ்டர் திருமண மண்டபமானது (674 சமீ) 22.04.25-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏலம் கோர விரும்பும் நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.25,000/ DD சமர்ப்பிக்க வேண்டும். ஏல நிபந்தனைகள் மாவட்ட இணையதளத்தில் (www.karur.nic.in) உள்ளது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்
Similar News
News July 11, 2025
கரூர்: 12th முடித்தால் கிராம வங்கியில் வேலை

தமிழகத்தில் NABARD வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில்( NABFINS) CSO( Customer Servive Officer) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை, 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 – 33 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், உங்களிடம் டூவீலர் இருப்பது அவசியமாகும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News July 11, 2025
கரூரில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜூலை 26ஆம் தேதி அரசு கலை கல்லூரி, தாந்தோன்றிமலையில் நடைபெறுகிறது. இம்முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு அனைத்து கல்வித்தகுதிகளிலும் பணியாட்களை தேர்வுசெய்யவுள்ளனர். வேலைதேடும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News July 11, 2025
கரூர்: தனியார் டிவி நிருபர் மீது தாக்குதல்

கரூர்: குளித்தலை, பிள்ளை தோப்பு தெருவைச் சேர்ந்தவர் சிவா(34). இவர், சன் ‘டிவி’யில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். போதையில் இருந்து நான்கு பேரும், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிவாவிடம் இருந்த மொபைல் போன், பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த சிவா, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.