News March 26, 2025
கரூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

கரூரில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News November 20, 2025
கரூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 20, 2025
கரூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம். மேலும் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
கரூரில் பெட்டிக்கடை உரிமையாளர் கைது

கரூர் தாந்தோணிமலை குடித்தெருவைச் சேர்ந்த வடிவேல் மகன் அண்ணாமலை (25). இவர் சின்னாண்டான் கோவில் அருகே உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் நகர போலீசார் புகையிலை விற்ற அண்ணாமலை மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.


