News March 21, 2024
கரூர்: காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்

திமுக கூட்டணியில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய எம்.பி ஜோதிமணி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன் ஆகியோரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு கேட்டு வருகின்றனர். இதனால் கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் குளப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Similar News
News October 27, 2025
கரூர்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

கரூரில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க<
News October 27, 2025
கரூர்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

கரூர் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இன்று முதல் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தைகளுக்கு திரவம் அளிக்க வேண்டும்.SHAREit
News October 27, 2025
கரூர் அருகே 4 பேர் அதிரடி கைது!

கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கோணிச்சிப்பட்டி பிள்ளையார் கோவில் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா (42), கோபாலகிருஷ்ணன் (23), ராகுல் (30), திருப்பதி (54) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் சீட்டு கட்டுகள், ரொக்கப்பணம் பறிமுதல் செய்தனர்.


