News December 6, 2024
கரூர் கலெக்டர் எச்சரிக்கை

கரூர் மாவட்ட கலெக்ட்ர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பெண்குழந்தைகள் தொடர்பான விழிப்புணர்வு கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு கீழ் திருமணம் செய்து வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 7, 2025
கரூர் வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

கரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News December 7, 2025
கரூரில் தட்டி தூக்கிய செந்தில் பாலாஜி

கரூர் வடக்கு பகுதி மீனவர் அணி இணைச் செயலாளராக இருந்த ரமேஷ், மற்றும் அ.தி.மு.க உறுப்பினர்களான சுரேஷ், ஆதி, சபீர் அகமது (2வது வார்டு) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி எம்எல் ஏ செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது எம்எல்ஏ சிவகாமி சுந்தரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
News December 7, 2025
கரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


