News May 17, 2024
கரூர் கலெக்டர் அறிவிப்பு

கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா முக்கிய நிகழ்வாக கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே.29ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனால், புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக ஜூன் 8ஆம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
Similar News
News January 2, 2026
கரூர்: மரத்திலிருந்து விழுந்தவர் பரிதாப பலி

கரூர், தான்தோன்றிமலை செட்டிபாளையம் அருகே ரவிக்குமார் என்பவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மூச்சுப் பேச்சு இன்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
News January 2, 2026
கரூர்: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு <
News January 2, 2026
கரூர்: கலெக்டர் அலுவலகம் முன்பு விபத்து

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில், குணசேகர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, பழனிசாமி ஓட்டிய பேருந்து முன் அறிவிப்பு இன்றி திடீரென பிரேக் போட்டதில் பேருந்து பின்புறம் மோதிய குணசேகர் படுகாயம் அடைந்து, மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


