News April 14, 2025
கரூர்: கடன் தீர்க்கும் ஈசன்!

கரூர்: பஞ்சப்பட்டியில் உள்ள மதுராந்தகேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் திருநீறு கலந்து கொடுக்கப்படும் மருந்துப் பிரசாதம் எந்த வித நோயையும் தீர்க்கும் தன்மை கொண்டதாம். மேலும், இங்கு தொடர்ந்து 21 நாட்கள் விளக்கேற்றி வழிபட்டால் கடன் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News April 16, 2025
சிறுமி பாலியல் வழக்கில் 6 நபர்களுக்கு அதிரடி தீர்ப்பு

கரூர், ராயனூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த வழக்கில் கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நிஷாந்த், அரவிந்த் ஆகியோர்களுக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், வசந்தகுமார், கலைவாணன், கோகுல்நாத், பார்த்திபன் ஆகியோர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதத்துடன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News April 16, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

கரூா் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கல்யாண வெங்கட்ரமணர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 16, 2025
கரூரில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு, கரூரை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய இந்த <