News March 27, 2025

கரூர்: ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

image

அமைச்சர் செந்தில்பாலாஜி சொந்த ஊரான கரூரில் டாஸ்மாக் மதுபான ஊழல் புகார் தொடர்பாக அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் “1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?” என்று போஸ்டரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 9, 2025

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

கரூர் மாவட்டத்தில் சமூக சேவையில் பங்களித்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான “தந்தை பெரியார் சமூக நீதிக் விருது” விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதிற்கு விண்ணப்பிக்க விரும்பும்வர்கள் தங்கள் விவரங்களை நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கடைசி நாள் 18.12.2025 என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்தார்.

News December 9, 2025

குளித்தலை அருகே விபத்து சம்பவ இடத்திலேயே பலி

image

குளித்தலை அருகே, குமாரமங்கலம் தேவஸ்தானம் சாலையில், கிஷோர் குமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில், வந்து கொண்டிருக்கும் பொழுது மண் சறுக்கி, வேப்ப மரத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News December 8, 2025

கரூர்: அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

image

கரூர்: இன்று வடகிழக்கு பருவமழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அமராவதி ஆற்றில் 2000 கன அடி முதல் 3000 கன அடி வரை திறக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார். எனவே கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!