News April 6, 2025

கரூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ் !

image

ஐடி துறையில் வேலைக்காக அதிக அளவில் இளைஞர்கள் சென்னைக்கு படையெடுத்து வரும் நிலையில், தற்போது கரூரில் மினி டைட்டல் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த டைட்டில் பார்க்கின் கட்டட வரைபடம் வடிவமைப்பு முடிந்துள்ளது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்கான டெண்டர் அரசால் விரைவில் கோரப்படும்.

Similar News

News December 8, 2025

அரவக்குறிச்சியில் விபத்து இளம்பெண் பலி!

image

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சாலையில், நேற்று பாரதி (25) என்ற பெண்மணி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, இவருக்கு முன்னால் அருள் என்பவர் ஓட்டிச் சென்ற லாரி, திடீரென பிரேக் போட்டு நின்றது. இதன் காரணமாக, பாரதி ஓட்டி வந்த வாகனம் லாரியின் பின்புறம் மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே பாரதி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 8, 2025

கரூர் அருகே அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள காட்டாம்புதூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 54), கணேசன் (38), தேர்நிலை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (29), நடுப்பாளையத்தைச் சேர்ந்த சந்தானம் (42), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பாலமுருகன் (30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News December 8, 2025

கரூர்: கொடி நாள் துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!

image

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று கொடி நாள் 2025ம் ஆண்டிற்கான வசூல் பணியினை இன்று உண்டியலில் பணம் செலுத்தி துவக்கி வைத்தார். மேலும் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.1,02,27,000 -ஐ 100% ஆக வசூல் செய்து கரூர் மாவட்டம் சாதனை புரிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தேநீர் உபசரிப்பு நிகழ்வில் 14 பயனாளிகளுக்கு ரூ.4,22,938 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

error: Content is protected !!