News May 14, 2024
கரூர் அருகே விபத்து

கரூர் திருக்காட்டுத்துறையை சேர்ந்தவர் சிவகுமார் 30. இவர் கடந்த மே 11ம் தேதி தனது எலக்ட்ரிக் பைக்கில் கரூர் சேலம் சாலையில் வந்துள்ளார். அப்போது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் ஒட்டி வந்த ஈச்சர் சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News April 19, 2025
ஜாக்கிரதை ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

கரூர் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
News April 19, 2025
கரூர் மின்சாரத் துறை எண்கள் !

▶️உதவி செயற்பொறியாளர் வடக்கு/கரூர்: 9445854074
▶️உதவி செயற்பொறியாளர்/ நகர்ப்புறம்/கரூர்: 04324-240988
▶️உதவி செயற்பொறியாளர் /வெள்ளியணை: 04324-281224
▶️உதவி செயற்பொறியாளர்/ அய்யர்மலை: 04323-245397
▶️உதவி செயற்பொறியாளர்/ குளித்தலை: 04323-222075
▶️உதவி செயற்பொறியாளர்/ சிந்தாமணிப்பட்டி: 04323-251246
▶️உதவி செயற்பொறியாளர்/ புகளூர்: 04324-277288
உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 19, 2025
கரூர்: வீடு புகுந்து செயின் திருடியவர்கள் கைது !

கரூர்: வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி(60) இவர் கடந்த, ஏப்.15ஆம் தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். மீண்டும் வீட்டுக்கு வந்த போது வீட்டில் இருந்த 6 அரை பவுன் செயின் திருடபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கொடுமுடியைச் சேர்ந்த கணேசன், துரை ராஜ் ஆகிய இருவரையும் நேற்று(ஏப்.14) கைது செய்தனர்.