News April 30, 2025
கரூர் அருகே அடுத்தடுத்த கொள்ளை முயற்சி

கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்( 34). இவருக்கு சொந்தமான ஆவரங்காட்டு புதூரில் உள்ள பண்ணை வீட்டின் கதவை மர்மநபர்கள் உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள ஜெயக்குமார் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனர். இது குறித்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
கரூர்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

கரூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
வேலை தேடும் யாருக்காவது உதவும் இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 15, 2025
தோகைமலை அருகே வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது!

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி நாதிபட்டியை சேர்ந்தவர் சுப்பன் மனைவி மாணிக்கம்மாள்(வயது 50). இவர் கொத்தமல்லி மேடு பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே சட்ட விரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து தோகைமலை போலீசார் சோதனை செய்து அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 15, 2025
அரவக்குறிச்சியில் வசமாக சிக்கிய 5 பேர்: அதிரடி கைது

அரவக்குறிச்சி உட்கோட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற சந்திரசேகர் (52), பிரவீன் (27), மருதை (48), அமுதா (50), கதிர்வேல் (38) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 178 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


