News April 27, 2025
கரூர்: அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அமைச்சர் பதவியை தொடர்வதில் சிக்கல் எழுந்தது. இதனால் அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்த மதுவிலக்கு, ஆயத்தீர்வத்துறை, அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
கரூர்: பைக் மீது பேருந்து மோதி பலி

சென்னை நோக்கி பளளப்பட்டியில் புறப்பட்ட அரசு பேருந்து அரியலூர் ஓட்டுநர் முருகாநந்தம் ஓட்டியபோது, ரங்கராஜ்நகர் அருகே எதிர் திசை பைக் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(60) தீவிர காயமடைந்து தனியார் ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேல்சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News November 22, 2025
கரூர் கலெக்டர் அறிவிப்பு!

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் BLO வழங்கும் கணக்கெடுப்பு படிவத்தில் 2002 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட SIR -ல் உங்கள் விபரத்தை பார்த்து பூர்த்தி செய்ய கீழே உள்ள QR code ஜ ஸ்கேன் செய்யவும். பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிப்பும் அறிவித்துள்ளார்.
News November 22, 2025
கரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


