News April 23, 2025
கரூர்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை <
Similar News
News December 18, 2025
BREAKING:கரூருக்கு கடும் நெருக்கடி: CM ஸ்டாலின்

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைவில் களைந்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வரி விதிப்பால் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் தீர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
News December 18, 2025
கரூரில் அலப்பறை செய்தவர் மீது பாய்ந்த வழக்கு!

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே, கழுகூர் பேருந்து நிறுத்த பகுதியில் நேற்று இரவு சின்னதுரை என்பவர் மது போதையில் பொதுமக்கள் மத்தியில் அலப்பறை செய்த்தாக கூறப்படுகிறது. இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சின்னதுரையை மடக்கி பிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.
News December 18, 2025
கரூர் மாணவிகளை போட்டோ எடுத்த வடமாநில நபர் கைது!

கரூர் மாவட்டம், புகலூர் வட்டம், நஞ்சை புகலூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தத்தில் தினசரி பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை வட மாநிலத்தவர் ஒருவர் தினசரி புகைப்படம் எடுத்து வந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்களே வட மாநிலத்தவரை பிடித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை செய்கின்றனர்.


