News April 2, 2025

கரூரில் Chat GPT பயிற்சி முகாம்

image

கரூர்: தான்தோன்றிமலையில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு Chat GPT பயிற்சி வகுப்பு வரும் ஏப்.12ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திலும், 99943 22859 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 5, 2025

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

தொல்குடியினர் புத்தாய்வுத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இளங்கலை/முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000, முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாதம் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் 12.12.2025 வரை fellowship.tntwd.org.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

கரூர்: மின்தடை அறிவிப்பு – உஷார் மக்களே!

image

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று (டிசம்பர்-05) தான்தோன்றிமலை, வேப்பம்பாளையம், தோகைமலை, புகழூர் ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தான்தோன்றிமலை, மணவாடி, காந்திகிராமம், பாளையம், சஞ்சய் நகர், வேலுச்சாமிபுரம், கோதுார், கோவிந்தம்பாளையம், மூட்டகாம்பட்டி, தோகைமலை, கிழக்கு தவிட்டுப் பாளையம், தளவாபாளையம், எம்.குமாரசாமி கல்லூரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

News December 4, 2025

கரூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

கரூர் மக்களே ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, அல்லது எடை குறைவாக வழங்குவது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் அல்லது கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க

error: Content is protected !!