News September 14, 2024
கரூரில் 39 மையங்களில் TNPSC தேர்வு

இன்று நடைபெறும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்காக கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் 10,821 நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள், தேர்வு மையங்கள் அனைத்திலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 27, 2025
நங்கவரம் அருகே கத்திக்குத்து

நங்கவரம் அருகே சண்முகம் என்பவரிடம், கேசவன் என்பவர் கடன் கொடுத்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. நேற்று இரவு சண்முகத்திடம் கேசவன் பணம் கேட்டு மிரட்டி மறைத்து வைத்த பட்டாகத்தியால், வெட்டியதில் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக GH-ல் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 27, 2025
கரூரில் நாளை.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம், வெண்ணைமலை வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள 2026-ம் ஆண்டிற்கான TNPSC-Gr-I &GR-2, ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு (நவ.28) அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு 94990-55912 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்தார்.
News November 27, 2025
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்: தீவிர விசாரணை

கடந்த செப்., 27ல், கரூரில் தவெக., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து, சிபிஐ., அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கரூர் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கோவையை சேர்ந்த ராகுல்காந்தி, கோகுலக்கண்ணன், கரூர் மாவட்ட தேமுதிக நிர்வாகி நவலடி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.


