News August 10, 2024
கரூரில் 13 சப் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்

கரூரில் 13 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பசுபதிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப் – இன்ஸ்பெக்டர் பானுமதி கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், தென்னிலை சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கும் என 10 பேர் உள்பட மொத்தம் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News October 22, 2025
கரூர் எஸ்.பி தலைமையில் பாதுகாப்பு தீவிரம்

வடகிழக்கு பருவமழையால் கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், பொதுமக்களை பாதுகாக்க ஆயுதப்படை மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. இந்த குழுவின் தயார்நிலையை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா இன்று (22.10.2025) ஆயுதப்படை முகாமில் நேரில் பார்வையிட்டு, மீட்பு உபகரணங்களை பரிசோதித்து, தேவையான வழிமுறைகளை வழங்கினார்.
News October 22, 2025
கரூரில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000-ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே<
News October 22, 2025
கரூர்: பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலை!

கரூர்: BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <