News April 12, 2025

கரூரில் 10-வது படித்த பெண்களுக்கு அரசு வேலை!

image

கரூர் அங்கன்வாடியில் காலியாக உள்ள, 206 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணிக்கு, 21 முதல், 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். <>https://karur.nic.in/ <<>>இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Similar News

News December 12, 2025

கரூரில் சோகம்; ரயிலில் அடிபட்டு பெண் பலி

image

கரூர் மாவட்டம் வெங்கமேடு VPG நகர் ரயில்வே பாதையில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெயர், விலாசம் தெரியாத பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் ரயில்வே காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

News December 12, 2025

கரூர்: ஆற்று மணல் மூட்டைகளை கடத்தி வந்த நபர் கைது!

image

கிருஷ்ணராயபுரம் தாலுக்கா லாலாபேட்டை ஆண்டியப்பன் நகர் அருகே லாலாபேட்டை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அரசு அனுமதி இன்றி மினி வேனில் ஆற்று மணலை மூட்டைகளாக கடத்தி வந்தது தெரியவந்தது. பிறகு மணல் கடத்தலில் ஈடுபட்ட மேட்டு திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் பாலகுமார் (26) என்ற கொத்தனார் தொழிலாளி மீது லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!