News April 21, 2025

கரூரில் வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?

image

கரூர்: புகழூர் மூலிமங்கலம் பிரிவு அருகே நேற்று மெக்கானிக் தனசேகர் காரை ஓட்டி வந்தபோது, கார் மளமளவெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அனணத்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. கரூரில் வெயில் சதம் அடித்து வரும்நிலையில் அடிக்கடி பேட்டரி வாகனங்கள், கார் ஆகியவை தீ பற்றி எரிவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 5, 2026

குளித்தலை: மகளைக் காப்பாற்ற.. தந்தை உயிரிழந்த சோகம்

image

குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரின் மகள் தனலட்சுமியை வீட்டில் வேலை செய்யாதது குறித்து திட்டியதற்கு கோபித்துக் கொண்ட தனலட்சுமி தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அப்போது மகள் கிணற்றின் ஓரத்தில் நின்றதை பார்த்து காப்பாற்ற குதித்த அண்ணாதுரை நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 5, 2026

கரூர்: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை! APPLY

image

கரூர் மக்களே, பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இன்றே (ஜன.5) கடைசி நாள். சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். (SHARE செய்யுங்

News January 5, 2026

தென்னிலை அருகே விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு

image

திருச்சியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது பைக்கில் கடந்த 1-ம் தேதி தென்னிலை கோட்டாந்தூர் சாலையில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் GH-ல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!