News April 16, 2025
கரூரில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு, கரூரை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய இந்த <
Similar News
News December 5, 2025
கரூர் காவல்துறை எச்சரிக்கை!

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .“அதிக வேகம் கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரநிலைகளில் 9498100780, காவல்துறை உதவி எண் 100, ஆம்புலன்ஸ் எண் 108 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
கரூர் மக்களே நாளை இங்க போங்க!

கரூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மனுஜ் ஷ்யாம் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான “நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்” நாளை (டிசம்பர்-6) சனிக்கிழமை புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
News December 5, 2025
குளித்தலை அருகே சமையல் பாத்திரத்தில் விழுந்த சிறுமி பலி

குளித்தலை அருகே கொம்பாடிபட்டியை சேர்ந்த ரஞ்சித் குமார் மகள் தமிழினி (03). இந்த சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கட்டில் இருந்து தவறி சமையல் செய்து கொண்டிருந்த பாத்திரத்தில் விழுந்து உடல் முழுவதும் சுடுநீர் பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். மேலும் லாலாபேட்டை நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


