News April 4, 2025
கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 10 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த பணிகளுக்காக <
Similar News
News December 14, 2025
கரூரில் வசமாக சிக்கிய இருவர்!

கரூர் மாவட்டம் பொய்கைபுத்தூர் கடைவீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த காமராஜர் (60) மற்றும் தங்கராஜ் 64 ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.
News December 14, 2025
கரூர்: விசாரணை வளையத்தில் விஜய்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விஜயிடம் விரைவில் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இந்தநிலையில் விஜயிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 14, 2025
கரூரில் உயிரைக் பறித்த ‘மிஸ்டரி’ வாகனம்!

கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பெரிய காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (60); இவர் கடந்த, 11ம் தேதி இரவு குப்புச்சிப்பா ளையம் பகுதியில், சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடை யாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த காமராஜ், நேற்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இது இதுகுறித்து காமராஜ் மகன் ஜோதிவாசன் (32) கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


