News December 31, 2024
கரூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது

கரூர் அருகே வேன் ஓட்டுநரான சிறுவன் பெரியகுளத்துப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுவனை போலீசார் நேற்று முன்தினம் (டிச.29) இரவு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News September 14, 2025
கரூரில் வாகனம் கவிழ்ந்து விபத்து; 16 பேர் படுகாயம்

கரூர் தோகைமலை அருகே குப்பைமேட்டுப்பட்டியை சேர்ந்த சீரங்காயி (40) உள்ளிட்டோர், டாட்டா ஏசி வாகனத்தில் கொசூர் குள்ளாயி அம்மன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீரங்காயி அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 14, 2025
கரூர்: ஏலச்சீட்டு மோசடி வாலிபர் குண்டாஸில் கைது!

கரூர் மாவட்டம் கடவூர் செம்பியாநத்தம் நாயக்கனூரை சேர்ந்தவர் முருகேசன்(34) ஏலச்சீட்டு நடத்தி 3 லட்சத்து, 30 ஆயிரம் பெற்று மோசடி செய்துள்ளார். கடந்த ஆகஸ்டில் சிந்தாமணிப்பட்டி போலீசார் முருகேசை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், எஸ்பி பரிந்துரையின்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் தங்கவேலு உத்தவிட்டார். இதையடுத்து முருகேசன் கைது செய்யப்பட்டார்.
News September 14, 2025
குழந்தை பிறந்தவுடன் தாய் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் வரகூர் பகுதியை சேர்ந்த அபிமன்யுவின் மனைவி சுஷ்மிதா, நிறைமாத கர்ப்பிணியான இவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆண் குழந்தை பெற்றார். பிறகு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அபிமன்யு அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.